TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 15 , 2021 1320 days 520 0
  • உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித் திட்டமானது மத்தியப் பிரதேசத்தில் பாயும் நர்மதை நதியின் ஓம்காரேஸ்வர் அணையில் கட்டமைக்கப்பட உள்ளது.
    • இந்தத் திட்டத்திற்கு சர்வதேச நிதியியல் கழகம், உலக வங்கி மற்றும் மின் தொடரமைப்பு ஆகிய 3 அமைப்புகள் உதவி செய்யவுள்ளன.
  • கர்நாடக மாநில முதல்வரான B.S. எடியூரப்பா அவர்கள் பெங்களூருவில் கிரிஷி சஞ்சீவினி வனம்  என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
    • இது நீர், மண் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக விவசாயத் துறையைச் சென்றடைவதற்காகவும் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கு வேண்டி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காகவும் தொடங்கப் பட்டுள்ளது.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக பிரதமர் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
    • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கி 1 ஆண்டு கால அனுசரிப்பிற்கான செயல்பாடுகளை முடிவு செய்யும்.
  • மிகவும் வயதான மற்றும் தற்பொழுது உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் சாம்பியனான அக்னிஸ் கெலெட்டி என்பவர் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று 100 வயதை எட்டினார்.
    • இவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஹங்கேரி அணிக்காக 10 பதக்கங்களை வென்றுள்ளார்.
  • பிலோமெனா புயலானது ஸ்பெயின் நாட்டில் மிகக் கடுமையான பனிப் பொழிவை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்