TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2021 1312 days 628 0
  • அமெரிக்காவில் பதவியிலிருந்து வெளியேறும் டிரம்ப் அரசாங்கமானது உய்கூர் முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் கொடுமைகளை ”இனப் படுகொலையாக” அறிவித்துள்ளது.
    • உய்கூர்கள் சீனாவின் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 55 இன  சிறுபான்மையினர்களில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர். மேலும் இவர்கள் வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கூர் தன்னாட்சிப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவானது கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசிகளை       மியான்மர், பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத் தீவுகள் மற்றும் செசல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு விநியோகிக்க உள்ளது.
    • கோவேக்ஸின் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு உள்நாட்டுத் தடுப்பூசியாகும். கோவிஷீல்டு ஆனது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றது.
  • இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள செமேரு என்ற ஒரு எரிமலையானது சமீபத்தில் வெடித்துச் சிதறியது.
  • பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி ஆகிய வங்கிகள் உள்நாட்டு முறைசார் முக்கியமான வங்கிகளாக தொடர்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • அப்துல் கலாம்நினைவுகளுக்கு மரணமில்லைஎன்ற புத்தகமானது மறைந்த குடியரசுத் தலைவரின் உடன் பிறந்தோர் மகளான ஏ பி ஜே எம்  நசீமா மறைக்காயர் அவர்களால் எழுதப் பட்டது.
  • மகாராஷ்டிரா மாநில அரசானது நாக்பூரில் உள்ள கோர்வாடா சர்வதேச உயிரியல் பூங்காவைபாலாசாஹேப் தாக்கரே கோர்வாடா சர்வதேச உயிரியல் பூங்காஎன்று மறு பெயரிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்