TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 24 , 2021 1311 days 703 0
  • கோவிட் -19 தடுப்பூசி போடும் நிர்வாகத்திற்கான ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஆர்.எஸ். சர்மா என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
    • இவர் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
  • இணைய தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலமாக கடன் வழங்குவது தொடர்பாக ஜெயந்த் குமார் டாஷ் தலைமையிலான ஒரு செயற்குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அம்மாநிலத்தின் முதல் பறவைத்  திருவிழாவான ‘கல்ரவ்’ என்ற ஒரு விழாவினை நாகி-நக்தி என்ற பறவைகள் சரணாலயத்தில் துவக்கி வைத்துள்ளார்.
  • தரவு மற்றும் பகுப்பாய்வுக்கு வேண்டி கூகுள் மேகச் சேமிப்பு கூட்டுச் சிறப்பு அம்சத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்று உள்ளதாக இன்போசிஸ் சமீபத்தில் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்