மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல் பசுமைத் தொழில்நுட்ப பெரிய உணவுப் பூங்கா பிரைவேட் லிமிடெட்-ஐ இராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ரூப்நகரில் தொடங்கி வைத்தார். இது ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெரிய உணவுப் பூங்காவாகும்.
பழம்பெரும் இயக்குநர் சேகர் கபூர், 65வது தேசிய திரைப்பட விருதுகளின் மத்தியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மத்தியக் குழுவில் ஒரு தலைவர், 10 பிற உறுப்பினர்கள் மற்றும் 5 மண்டலக் குழுக்களின் தலைவர்கள் இடம் பெறுவர்.
கடக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான லெப்டின்ட் ஜெனரல் ஹர்பால் சிங் எல்லை சாலைகள் துறைத் தலைவராக (Direct General Border Roads) நியமிக்கப்பட்டுள்ளார். 1982ஆம் ஆண்டு பொறியாளர்கள் படைப் பிரிவில் இணைந்த இவர் பின்னர், ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லை சாலைப் பணிகள் படையின் (Border Road Task Force) தலைவராக நியமிக்கப்பட்டார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், Skill Next எனும் BMWவின் திறன் மேம்பாட்டுத் தொடக்கத்தை (Initiative), BMW கார் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரி (College of Engineering, Guindy) மாணவர்களும் கலந்து கொண்டனர்.