TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 29 , 2021 1306 days 649 0
  • ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் அவர்கள் வருடாந்திர தொசாலி தேசியக் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை புவேனேஸ்வரில் தொடங்கி வைத்தார்.
    • இது கிழக்கு இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • மேகாலய மாநில முதல்வரான கான்ராட் K சங்மா அவர்கள் இந்தியாவின் நீளமான சாலை வளைவு மேம்பாலமான ”வாக்ரேவ் மேம்பாலத்தை” மேகாலயாவின் கிழக்குக் காசிக் குன்றுகள் மாவட்டத்தில் உள்ள சோஹ்பாரில் திறந்து வைத்தார்.
  • இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையானது குல்மார்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லடாக்கை வென்று இந்தியப் பனி  ஹாக்கிக் கூட்டமைப்பின் 10வது தேசிய பனி  ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.
    • லடாக்கானது இந்தியாவில் பனி ஹாக்கியின் தலைநகரமாகக் கருதப் படுகின்றது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்