புதிய இராணுவத் தலைமையிலான அரசாங்கத்தை அங்கீகரிக்காததால் மியான்மருடனான தனது அனைத்து ராஜதந்திர உறவுகளையும் நியூசிலாந்து நாடானது அதிகாரப் பூர்வமாக நிறுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, அன்று சீனாவானது சந்திரப் புத்தாண்டைக் கொண்டாடச் செய்தது.
இது எருது ஆண்டினுள் (Year of the Ox) நுழைந்துள்ளது.
தடகள வீரரான ஹிமா தாஸ் அவர்கள் அஸ்ஸாம் அரசால் துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசியக் கொடுப்பனவு நிறுவனமானது ‘NPCI PayAuth Challenge’ என்ற ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் மியான்மரில் உள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அரசாங்கமானது முதல் சுற்று பொருளாதாரத் தடைகளை அடையாளம் கண்டு, அதன் பிறகு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும்.