TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2019 1786 days 728 0
  • இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒடிசாவின் கோபால்பூர் கடற்கரை ஓரத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் சதுப்பு நில உயிரியல் பிராந்திய மையத்தால் இரண்டு புதிய கடற்கரை விலாங்கு மீன் இனங்கள் கண்டறியப்பட்டு அவை ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றன.
    • அவையாவன: ஜிம்னோதொராக்ஸ் அந்தமான்யென்சீசிஸ் மற்றும் ஜிம்னோதொராக்ஸ் ஸ்மிதி.
  • நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்காக வெள்ளை மாளிகையின் தலைமைப் பத்திரிக்கைத் தொடர்பாளரான பீட்டர் பேக்கர் எழுதிய ஒரு புத்தகமான “ஒபாமா : ஒரு வரலாற்றின் அமைப்பு“ என்ற புத்தகம் வெளியிடப் பட்டிருக்கின்றது. இப்புத்தகம் ஒபாமாவின் அதிபர் பதவிக் காலங்களை வரிசைப் படுத்துகின்றது.
  • நடைபெற்றுக் கொண்டிருக்கும் ISSF உலகத் துப்பாக்கிச் சுடுதல் கோப்பையில் அபிஷேக் வர்மாவும் சௌரப் சௌத்ரியும் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வென்று இருக்கின்றனர்.
  • “The La Ultra - The High” என்ற மராத்தான் போட்டியின் 10வது பதிப்பு லடாக்கில் 55, 111, 222, 333, 555 கிலோ மீட்டர் பிரிவுகளில் நடத்தப்பட்டது. மிக மோசமான பருவநிலை மற்றும் அதிக உயரம் காரணமாக இது கடினமான மராத்தான்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்