மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா என்பவருக்குத் தமிழக ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
வேகூல் ஃபுட்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கான (IITM’s RASA) நிலையான மீளுருவாக்க வேளாண்மை தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவுபடுத்த மதராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
வேகூல் ஃபுட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பத் தளம் ஆகும்.
தமிழகப் பால் வளத்துறை அமைச்சர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
நிதி ஆயோக் அமைப்பின் 8வது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் புதுதில்லியில் நடத்தப் பட்டது.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் ஒரு உறுப்பினராக சுமன் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் ராக் 'என்' ரோல் வகை பாடலின் ராணி என அழைக்கப்படும் பாப் பாடகி டினா டர்னர் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் காலமானார்.
அடுத்து நிகழவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் சமணம் ஆகிய சில சமயங்கள் மட்டுமே ஒரு விருப்பத் தெரிவாக எடுத்துக் கொள்ளப்படும்.