TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2023 417 days 229 0

 

  • மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா என்பவருக்குத் தமிழக ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
  • வேகூல் ஃபுட்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கான (IITM’s RASA) நிலையான மீளுருவாக்க வேளாண்மை தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவுபடுத்த மதராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
    • வேகூல் ஃபுட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பத் தளம் ஆகும்.
  • தமிழகப் பால் வளத்துறை அமைச்சர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
  • நிதி ஆயோக் அமைப்பின் 8வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடத்தப் பட்டது.
  • ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் ஒரு உறுப்பினராக சுமன் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • சமீபத்தில் ராக் 'என்' ரோல் வகை பாடலின் ராணி என அழைக்கப்படும் பாப் பாடகி டினா டர்னர் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் காலமானார்.
  • அடுத்து நிகழவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் சமணம் ஆகிய சில சமயங்கள் மட்டுமே ஒரு விருப்பத் தெரிவாக எடுத்துக் கொள்ளப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்