சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிலையைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
அபுதாபியில் அமைந்துள்ள தப்ரீத் நிறுவனமானது, ஹைதராபாத் மருந்தியல் சார் நகரத்திற்கான குளிரூட்டல் உள்கட்டமைப்பினை கட்டமைப்பதற்காக 200 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
நிதித் துறை அமைச்சகமானது, இயங்கலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் வைக்கப்படும் பந்தயங்களின் பட்டியலிடப்பட்ட மதிப்பில் 28% சரக்கு மற்றும் சேவை வரியினை விதிப்பதற்கான விதிகளை அறிவித்துள்ளது.