டாடா குழுமம் ஆனது, 28.6 பில்லியன் டாலர் நிறுவன மதிப்புடன், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய எழுத்தாளர் சஞ்சனா தாகூர் தனது "ஐஸ்வர்யா ராய்" என்ற கதைக்காக 2024 ஆம் ஆண்டு காமன்வெல்த் சிறுகதை பரிசை வென்றுள்ளார்.
தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA) விக்ரம் மிஸ்ரி அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
K-pop குழுவான SEVENTEEN, பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் யுனெஸ்கோ அமைப்பின் பூர்வாங்க (முதலாவதும் கூட) இளையோர்களுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஐபீரிய சிவிங்கிப் பூனை இனம் ஆனது, IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் உயிரினங்கள் என்ற நிலையிலிருந்து எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.
மூன்று பெரிய ஐரோப்பிய விண்வெளித் துறை நிறுவனங்கள் ஆனது, விண்வெளிப் பொருட்களின் குப்பைகள் இல்லாத நிலை என்ற தரநிலைகளுக்கு இணங்க பெரிய புவித் தாழ்மட்ட சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள் தளங்களை உருவாக்கச் செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் (ESA) பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
நேட்டோ அமைப்பானது நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அவர்களை தனது அடுத்தப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.