சென்னை மெட்ரோ இரயில் சேவைக்கான 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்வதற்கு என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ள்ளது.
இது 128 இரயில் நிலையங்களுடன் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான பகுதிகளில் சேவை வழங்க உள்ளது என்பதோடு இது 21 இடங்களில் பல்மாதிரிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு அமைப்புகளையும் கொண்டிருக்கும்.
2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியானது சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது என்பதோடு இதில் 38 மாவட்டங்களில் இருந்து 33,000 பங்கேற்பாளர்கள் ஐந்து பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.
புது டெல்லியில் உள்ள ஜமைக்கா தூதரக ஆணைய அலுவலகத்திற்கு முன்னால் உள்ள சாலைக்கு 'ஜமைக்கா மார்க்கம்' என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டுள்ளது.
பல்லுயிரியலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் மனிதர்கள் மற்றும் வன விலங்குகளின் சகவாழ்வை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தைச் சமூகத்திற்கு உணர்த்துவதற்காக 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை தேசிய வனவிலங்கு வாரம் ஆனது அனுசரிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள உயிரி-அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ஆலையுடன் கூடிய ‘லால் திபரா கௌஷாலா’-கோசாலையினை - பிரதமர் திறந்து வைத்துள்ளார்.