பள்ளி/கல்லூரி நேரத்திற்குப் பிறகு கலை, அறிவியல், விளையாட்டு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆளுமை திறன்கள் மற்றும் பணித் திறன் ஆகியவற்றில் முழுமையான திறன்களை வளர்த்துக் கொள்ள, மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்லூரியில் "நல்லோசை" மற்றும் பள்ளிகளில் "கற்றல் இனிது" ஆகிய முன்னெடுப்புகளை தமிழக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தின் 2 ஆம் அலகு ஆனது அதன் ஓராண்டு காலத் தொடர் செயல்பாடுகளை சமீபத்தில் நிறைவு செய்துள்ளது.
மும்பையில் வரைகலை, மெருகுக் காட்சிகள், விளையாட்டுச் செயலிகள், கேலிச் சித்திரங்கள் நுட்பம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட (மெய் மற்றும் மிகை மெய்த் தோற்றங்களின் கலவை) மெய்த் தோற்றங்கள் (AVGC-XR) ஆகியவற்றுக்கான தேசிய சிறப்பு நுட்ப மையத்தினை (NCoE) நிறுவுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் வருடாந்திர உச்ச நிலையிலான சர்வதேச மாநாடான 2024 ஆம் ஆண்டு இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை ஆனது (IPRD) புது டெல்லியில் நடைபெற்றது.
மும்பை கிரிக்கெட் அணியானது 27 ஆண்டுகளுக்குப் பிறகு 15வது முறையாக இரானி கோப்பையை வென்றுள்ளது.