பிரிட்டனைச் சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் செல்வம் மிக்கவர்களின் பட்டியலில், 22 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் செல்வம் மிக்கவர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாபேவில் பிறந்த வலேரி மோரன் என்பவர் டைம்ஸ் செல்வம் மிக்கவர்களின் பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்ட முதலாவது கறுப்பினப் பெண் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார்.
தேசியத் தொழில்நுட்ப தினத்தின் கருத்துருவானது (மே 11, 2019), “மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்” என்பதாகும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இலாப நோக்கில்லா முன்னெடுப்பு என்ற நிறுவனத்தினால் வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளையடுத்து இன்போசிஸ் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட உரிமத்தை (FCRA - Foreign Contribution Regulation Act) மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது.
FCRA ஆனது வெளிநாட்டு நிதிகளைப் பெற கூட்டமைப்பு மற்றும் அரசு சாரா நிறுவனத்திற்கு அனுமதியளிக்கின்றது. மேலும் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிதிகளைப் பெற FCRA-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ராயல் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த ஒரு பீரங்கிக் கப்பலான எச்எம்ஏஎஸ் டோவோம்பா ஆனது தீவிரவாத எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் விரிவான கடல்சார் பாதுகாப்பு முன்னெடுப்புகள் ஆகியவற்றிற்காக சென்னை துறைமுகத்திற்கு வருகை புரிந்துள்ளது. மேலும் இது குறித்த செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/ausindex-19/.
கோடைக்கால சுற்றுலாவின் போது பொது மக்கள் மற்றும் காவல் துறை ஆகியோர்களுக்கு உதவுவதற்காக “நீலகிரி படைப் பிரிவு” என்ற 60 வீரர்கள் கொண்ட வலிமையான தன்னார்வலர்கள் படையை நீலகிரி மாவட்டக் காவல் துறை உருவாக்கியுள்ளது.
அஸ்ஸாம் வன அதிகாரி ஒருவர் இந்தியாவின் மிகச்சிறிய மந்தாரைகளில் (Orchid) ஒன்றான “லெக்கனோர்ச்சிஸ் தைவானியானா” என்பதைக் கண்டறிந்துள்ளார். இது குறுகிய காலத்தில் பூக்கும் தன்மையுடைய தாவரமாகும். இது மிகச்சிறிய அளவுடையதாகும். இது முதன்முறையாக தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மந்தாரையானது மைக்கோஹெட்ரோடிரோப் என்ற ஒரு ஒட்டுண்ணித் தாவரமாகும். இது உணவிற்காக ஒளிச்சேர்க்கையைச் சார்ந்து அல்லாமல் பூஞ்சையைச் சார்ந்து உள்ளது.
பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு 6 பில்லியன் டாலர்களை அந்நாட்டிற்கு கடனாக வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியமானது (IMF - International Monetary Fund) அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பின் 3வது ஒரு நாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 147வது விக்கெட்டை வீழ்த்தியதையடுத்து பெண்களுக்கான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராக பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சானா மிர் உருவெடுத்துள்ளார்.
உலகின் முன்னிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக் 2019 ஆம் ஆண்டின் மேட்ரிட் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இவர் கிரீஸைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஸ்டெபானோஸ் சிசீபாஸ் என்பவரை 6-3, 6-4 என்ற இரண்டு நேர் செட்களில் வீழ்த்தினார்.