TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 5 , 2019 1783 days 597 0
  • தமிழ்நாட்டில் சேலம் ரயில்வே பிரிவின் கீழ் உள்ள ஐந்து ரயில் நிலையங்களான சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்கள்  சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் செயல்திறனுக்காக ஐஎஸ்ஓ 14001: 2015 என்ற சான்றிதழைப் பெற்றுள்ளன.
  • மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநரான ரிஷி குமார் சுக்லா இணைய வழிக் குற்ற விசாரணை மற்றும் இணைய வழித் தடயவியல் மீதான முதலாவது தேசிய மாநாட்டைப் புது தில்லியில் உள்ள மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் தொடங்கி வைத்தார்.
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது அதன் பல்வேறு துறைகளிலும் இந்திய உணவுக் கழகம் உட்பட அதன் அனைத்து பொதுத் துறைப் பிரிவுகளிலும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் “அனைத்து வகையான ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பொருட்களுக்குத் தடை” விதித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது கருத்துகளைப் பெறுவதற்காகப் “பெருநிறுவன கடன்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தையின் வளர்ச்சி மீதான பணிக்குழுவின் அறிக்கையை” வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவிற்குக் கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன் தலைமை தாங்கினார்.
  • கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய-அமெரிக்கரான ஷிரீன் மேத்யூஸை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
    • இந்தியாவைப் போலல்லாமல், அமெரிக்க அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவானது “நீதிபதிகள் தங்கள் பதவியை நன்னடத்தைக் காலம் முழுக்க வகிக்கலாம்" என்று கூறுகின்றது. அதாவது சிலபல சூழ்நிலைகளைத் தவிர, அவர்கள் பதவி வாழ்நாள் பதவிக் காலம் கொண்டது.
  • சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டப் பங்களித்ததற்காக வாடிகனால் வங்க தேசத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முஹம்மது யூனுஸுக்கு “செயின்ட் பிரான்சிஸ்சின் அமைதி விளக்கு” என்ற விருது வழங்கப்பட்டது.
    • இந்த விருதானது மக்களிடையே அமைதியையும் விவாதங்களையும் ஊக்குவித்ததற்காக ஒரு தனிநபரின் சிறப்பான பணிக்கான அங்கீகாரமாகும்.
  • மாட்ரிட்டில் நடைபெற்ற உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை ஜார்க்கண்டின் 17 வயதான கோமலிகா பாரி பெற்றார்.
    • 2009 ஆம் ஆண்டில் பட்டத்தை வென்ற தீபிகா குமாரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது உலக சாம்பியன் (18 வயதுக்குட்பட்டவர்) இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்