TNPSC Thervupettagam
August 19 , 2021 1103 days 549 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தேசிய ஹைட்ரஜன் திட்டத்தினை  செங்கோட்டையிலிருந்துத் தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டமானது பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான ஓர் உலக மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கு விழைகிறது.
  • இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியா அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையின் விளம்பரத் தூதராக செயல்பட உள்ளார்.
  • புதுடெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனமானது, தனது வளாகத்தினுள்ளேயே ஒரு தீயணைப்பு நிலையத்தை அமைத்த முதல் இந்திய மருத்துவமனை என்று உருவெடுத்துள்ளது.
    • இதற்காக AIIMS நிறுவனமானது டெல்லி தீயணைப்புச் சேவையுடன் கைகோர்த்து உள்ளது.
  • போலந்தின் வ்ரோக்லாவில் நடைபெற்ற இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய 21 வயதிற்குட்பட்ட உலக சாம்பியனாக கோமாலிகா பாரி என்பவர் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
    • தீபிகா குமாரியை அடுத்து 21 வயதிற்குட்பட்டோர் மற்றும் 18 வயதிற்குட்பட்டோர் ஆகியோருக்கான உலக சாம்பியன் ஆகிய இரு பட்டங்களையும் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்