மூத்த பத்திரிக்கையாளர் இராகுல் மகாஜன் மாநிலங்களவை தொலைக்காட்சியின் புதிய தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தொலைக்காட்சியானது மாநிலங்களவையால் நிர்வகிக்கப்படுகிறது.
பிரசார் பார்தி குழுமத்தின் தலைவர் திரு.சூர்யப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இராகுல் மஹாஜன் புதிய தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு “புதிய இந்தியாவிற்கான ஓட்டம்“ (Run for New India) மாரத்தானை குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
HIV/AIDSஆல் பாதிக்கப்பட்ட2மில்லியன் மக்கள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு ஒரு முறையாவது இலவசமாக பரிசோதனை செய்து கொள்வதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
இந்த சோதனை ரத்தத்தில் RNAவின் அளவை அளவிடுவதோடு, வைரஸ் பெருக்கத்தையும் கண்டறியும். வைரஸ் பெருக்கமானது எதிர் ரெட்ரோவைரஸ் சிகிச்சையின் தரத்தை கண்காணிப்பதற்கு உதவும்.