TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2021 1257 days 597 0
  • மாடர்னா நிறுவனமானது தனது கொரோனா தடுப்பூசியினை குழந்தைகள் மீதும் 6 மாதங்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மீதும் செலுத்தி பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
    • கிட்கோவ் (KidCOVE) ஆய்வு எனப்படும் இந்த மருத்துவச் சோதனையானது கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தோராயமாக 6,750 குழந்தைகளிடம் மேற்கொள்ளப் பட உள்ளது.
  • இந்தியப் பாராளுமன்றம், தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ஒரு பாராளுமன்ற நட்புக் குழுவினை உருவாக்குவதற்கான முன்மொழிவு பற்றி விவாதித்து வருகிறது.
    • இது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • ஒலிநாடாப் பேழைகளைக் கண்டுபிடித்த டச்சு அறிவியலாளரான லூ ஓட்டென்ஸ் சமீபத்தில் இயற்கை எய்தினார்.
    • மேலும் அவர் காந்தநாடாப் பேழையினையும் கணினி குறுவட்டுகளையும் (magnetic tape players and the computer discs) உருவாக்கி உள்ளார்.
  • முரளி ஸ்ரீசங்கர் அவர்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி வரம்பு 8.22 மீட்டராகும். ஸ்ரீசங்கர் பெடரேஷன் கோப்பைப் போட்டிகளில் தனது இறுதி முயற்சியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்