TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2021 1255 days 646 0
  • மகாராஷ்டிராவிலுள்ள கௌதாலா ஆத்ரம்காட் வனவிலங்குச் சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக தற்போது தான் ஒரு புலியானது தென்பட்டு உள்ளது.
  • மறைமுகமான கருணைக் கொலையை அதிகாரப் பூர்வமாக்கும் ஒரு சட்டத்திற்கு ஸ்பெயின் நாட்டின்  பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இத்துடன் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் வரிசையில் மறைமுக கருணைக் கொலையை அதிகாரப் பூர்வமாக்கிய நான்காவது ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது.
  • டிஜிட்டல் க்ரீன் என்ற சான்றிதழானது ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு முன்மொழிவு ஆகும்.
    • பெருந்தொற்று காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு  இடையில்      பாதுகாப்புடன் கூடிய தடையற்ற சுதந்திரமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாகும்.
  • இராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெஹ்லாட் அவர்கள், “முக்கிய மந்திரி சிரஞ்சீவி யோஜனா” எனப்படும் பொது சுகாதாரத்  திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
    • இத்திட்டத்தின் கீழ், இராஜஸ்தானில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச சுகாதார சேவைகள் வழங்கப் படும்.
  • யுனெஸ்கோ அமைப்பானது யுஎஸ்ஓ இந்தியா மற்றும் டூன்ஸ் மீடியா குழுமத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கான நீர்ப் பாதுகாப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வுத் திட்டத்தில்  இணைந்துள்ளது.
  • தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹு ஹசன் (Samia Suluhu Hassan) என்பவர் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்