TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2021 1251 days 573 0
  • சர்வதேசக் கூட்டு ஆணையத்தினால் (Joint Commission International  - JCI) அங்கீகாரம் பெற்ற 39 இந்திய மருத்துவமனைகளில் ஒன்றாகவும் சென்னையில் மூன்றாவது மருத்துவமனையாகவும் MGM ஹெல்த்கேர் மருத்துவமனை மாறியுள்ளது.
    • JCI என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு அவற்றின் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய வரைமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
  • ஓய்வூதியம் பெறுவதற்குக் கட்டாயமான ஜீவன் பிரமாண் எனப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை.
    • மேலும் அரசானது, தனது உடனடி குறுஞ்செய்தித் தீர்வு தளமான சந்தேஷ் என்பதற்கு ஆதார் சரிபார்ப்பு என்பது தன்னார்வ அடிப்படையிலானது என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்