TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2021 1248 days 598 0
  • மூத்த அதிகாரியான சௌரப் கார்க் அவர்கள் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI - Unique Identification Authority of India) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய குடிமைப்பணி அதிகாரி சஞ்சீவ் குமார் அவர்கள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய குடிமைப்பணி அதிகாரி அதீஷ் சந்திரா அவர்கள் இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Times Network India பொருளாதார மாநாடு 2021 என்ற மாநாடானது இந்த ஆண்டின் மார்ச் 25 – 26, ஆகிய  தேதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “இந்தியாவின் பத்தாண்டு : சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்பதாகும்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புனைக் கதைகளுக்கான தேசியப் புத்தக விமர்சகர்கள் வட்டாரப் பரிசானது மேசி ஓ ஃபேல் என்பவரின் “ஹேம்நெட்” என்ற புத்தகத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
    • டாம் சோயெல்னர் என்பவரின் “Island on Fire : The Revolt That Ended Slavery in the British Empire” என்ற புத்தகம் புனைக் கதை அல்லாத பிரிவில் இப்பரிசினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்