TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 9 , 2021 1236 days 629 0
  • தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையில் சென்னை சுங்கத் துறை அமைப்பானது “நீலக் கழுகு நடவடிக்கை (ஆபரேஷன் புளு ஈகில்)” எனப்படும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    • இந்த நடவடிக்கையானது தமிழ்நாட்டில் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களைக் கடத்தி அவற்றை மக்களுக்கு வழங்கும் கும்பல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும்.
  • சர்வதேச தலையணைச் சண்டை தினமானது உலகின் பல நகரங்களில் கொண்டாடப் படும் ஒரு நிகழ்வாகும்.
    • இது ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • ஏப்ரல் 6 ஆம் நாளை மேம்பாடு மற்றும் அமைதி ஆகியவற்றிற்கான விளையாட்டின் சர்வதேச தினமாக அறிவிக்கும் முடிவை ஐ.நா.வின் பொதுச்  சபை 2013 ஆம் ஆண்டின்  ஆகஸ்ட்  மாதத்தில் மேற்கொண்டது.
    • சமூக உள்ளடக்கம், பாலினச் சமத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றிற்கான சக்தி வாய்ந்த ஒரு கருவியாக  விளையாட்டு இருப்பதாக யுனெஸ்கோ நம்புகிறது.
  • ருவாண்டாவில் வாழும் துட்சி மக்களுக்கு எதிராக 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 7 ஆம் தேதியினை நினைவு நாளாக யுனெஸ்கோ கடைபிடிக்கிறது.
    • இத்தினம் ஹுட்டு தீவிரவாத அரசினால் துட்சி சிறுபான்மையினருக்கு எதிராக நடத்திய இனப்படுகொலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்