TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2021 1228 days 574 0
  • சண்டிகர் நகரமானது சமீபத்தில் சைக்கிள் ஓட்டுதலுக்கான இந்த வகையில் தனது முதலாவது வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்தியாவில் இவ்வாறு ஒரு நகரம் சைக்கிள் ஓட்டுதலுக்கான கொள்கையை உருவாக்கியது இதுவே முதல் முறையாகும்.
  • உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏழை நாடுகளுக்குப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை நடவடிக்கைகளுக்கான நிதி குறித்து ஆலோசனை வழங்குவதற்கான ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
    • ஏழை நாடுகளின் கடன் சுமைகளைக் குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில், பருவநிலை மாற்றத்தை நோக்கிச் செயல்பட இரு நிதி அமைப்புகளும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும்.
  • சிலி நாட்டில், ஹரு ஓனி (Haru Oni) என்ற திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டில் eFuel என்ற  எரிபொருளை உற்பத்தி செய்ய போர்ஷே நிறுவனமானது சீமென்ஸ் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
    • eFuel என்பது புதிதாக வளர்ந்து வரும் கார்பன் நடுநிலை எரிபொருள்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் எரிபொருளைச் சேர்ந்ததாகும்.
  • 2020-21 காலப்பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் ஆனது தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது.
    • பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா என்பது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இது வறுமைக் குறைப்பு என்ற யுக்தியின் ஒரு பகுதியாக சாலை இணைப்பில்லாத கிராமங்களுக்கு அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற  சாலை இணைப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்