TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2021 1227 days 657 0
  • இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் பிரான்சின் விண்வெளி நிறுவனமான CNES அமைப்புடன், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானுக்காக இணைந்துப் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் ஒன்றினில் கையெழுத்திட்டுள்ளது.
    • CNES நிறுவனம் பிரான்சின் பயிற்சித் தளங்களில் இந்திய விமானப் பொறியியலாளர்கள் மற்றும் CAPCOM திட்டக் கட்டுப்பாட்டுக் குழுவினர் ஆகியோருக்குப் பயிற்சி அளிக்கும்.
  • தேசியப் புத்தாக்க நிறுவன ஆலோசனை மன்றத்தின் (National Startup Advisory Council - NSAC) முதல் சந்திப்பானது சமீபத்தில் நடைபெற்றது.
    • இது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையினால் (DPIIT - Department for Promotion of Industry and Internal Trade) அமைக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, முதன்முறையாக ஐ.நா. உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டினை 2021 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இந்த உச்சி மாநாட்டில் இந்தியா தேசிய அளவிலான ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்.
  • சர்வதேச நாணய நிதியமானது சமீபத்தில் துணை சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கான பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தை வெளியிட்டது.
    • இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மெதுவான வளர்ச்சியினை இப்பகுதி காண உள்ளது.
  • தேசியப் புலனாய்வு அமைப்பானது BRICS நாடுகளுடன் இணைந்து தீவிரவாதிகள் இணைய தளங்களைத் தவறாக பயன்படுத்துதல் (Misuse of Internet by terrorists) எனும் தலைப்பில் ஒரு காணொலி நிகழ்வை சமீபத்தில் ஏற்பாடு செய்தது.
    • 2021 ஆம் ஆண்டிற்கான BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இந்தியா வகிப்பதால் இந்தக் கருத்தரங்கினை இந்தியா நடத்தியது.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜோர்டனின் ஹேஷ்மைத் பேரரசின் இரண்டாம் அப்துல்லாவிற்கும் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் அந்நாடு நிறுவப்பட்ட 100 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  • ஐக்கிய அரபு அமீரகமானது ரசீத் (Rashid) எனப்படும் ஒரு சுற்றித் திரியும் ஊர்தியினை (ரோவர்) 2024 ஆம் ஆண்டில் நிலவுக்கு அனுப்ப உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்