TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2021 1223 days 643 0
  • 2021 ஆம் ஆண்டு மே 01 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் – 19 தடுப்பூசியினை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • 2050 ஆம் ஆண்டுக்குள் 2015 ஆம் ஆண்டின் ஒப்பீட்டளவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை 80% என்ற அளவிற்குக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தினை இஸ்ரேலிய அரசு சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
    • 2025 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியை மூலமாகக் கொண்டு செயல்படும் அனைத்து மின் நிலையங்களையும் மூடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு கிளையின் நிபுணர் உறுப்பினராக பொறுப்பேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • “கஞ்சார்” எனப்படும் 8வது இந்திய-கிர்கிஷ் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி கிர்கிஷ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் தொடங்கப் பட்டுள்ளது.
    • இப்பயிற்சியில் அதி உயர்ட்டத்திலான போர் முறைகள், மலைசார்ந்த போர் முறைகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போர் முறைகள் போன்றவற்றில் பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது.
  • காலநிலை மாற்றப் பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிணைந்துச் செயல்பட உலகின் இரண்டு மிகப்பெரிய மாசு வெளிப்படுத்தும் நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
    • இரு நாடுகளும் பாரீஸ் உடன்படிக்கையைக் கடைபிடிக்கப் பணியாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்