TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2021 1222 days 606 0
  • பெங்களூருவை மையமாக கொண்ட வால்மார்ட் முதலீடு செய்த ஒரு மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் கிளியர்டிரிப் (Cleartrip) எனப்படும் ஒரு பயணப்பதிவு தளத்தினை 40 பில்லியன் டாலருக்கு வாங்க திட்டம் தீட்டியுள்ளது.
  • ஸ்ரீநகரைச் சேர்ந்த சோலிஹா சபீர் அவரது பெயரை இந்தியாவின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளார்.
    • இவர் ஹப்பா கட்டூன்ஸ் கவிதைக்கு (Zoon Book - சூன் புத்தகம்) புத்துயிர் அளித்த ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த இளம் மற்றும் முதல் நூல் ஆசிரியர் ஆவார்.
  • தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி நீரவ் மோடியை அந்த நாட்டிலிருந்து வெளியேற்ற ஐக்கிய ராஜ்ஜிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 14000 கோடிக்கும் மேலான மோசடியினை செய்துள்ளார். இதுவரை நடந்ததில், இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய மோசடிகும்.
  • “Believe – What Life and Cricket Taught Me” என்று தலைப்பிடப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் சுயசரிதைப் புத்தகம் வெளியாக உள்ளது.
    • இந்தப் புத்தகம் சுரேஷ் ரெய்னா மற்றும் விளையாட்டுத் துறை நூலாசிரியர் பரத் சுந்தரேசன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.
  • தாஸ்கண்ட்டில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 49 கிலோகிராம் எடைப் பிரிவில் வெற்றி பெற்று மீராபாய் சானு புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.
    • இப்போட்டியில் இவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • அமெரிக்காவின் நாசா நிறுவனம் தனது ஆர்டெமிஸ் திட்டத்திற்காக எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் X (Space X) நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
    • இந்நிறுவனம் முதல் வணிகரீதியிலான தரையிங்கு விண்கலத்தை உருவாக்க உள்ளதோடு 2024 ஆம் ஆண்டிற்குள் அடுத்த இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை நிலவுவிற்கு கொண்டு செல்லவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்