TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2021 1216 days 577 0
  • தென் கொரியாவின் LG நிறுவனமானது தனது கைபேசி வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் கைபேசி தயாரிப்புப் பிரிவு கடந்த ஆறு ஆண்டுகளாக இழப்பையே கண்டு வந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் 116 மாவட்டங்களில் மலேரியா அற்ற நிலை உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
    • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மலேரியா நோய் பாதிப்பு 84.5% குறைந்துள்ளது. மேலும் இந்தியாவானது மலேரியா நோய்ப் பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகளை  83.6% என்ற அளவிற்குக் குறைத்துள்ளது.
  • இந்திய-சீன எல்லையிலுள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள நிதி என்ற பள்ளத்தாக்கின் சும்னா பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளிலுள்ள பனிப்பாறைகள், 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அதன் செங்குத்து உயரத்திற்கு இணையான அளவு மற்றும் தனது பனியளவில் பாதியளவு பனியினை இழந்து வருகின்றன.
  • பசிபிக் தீவுகளில் வாழ்பவர்கள் மற்றும் ஆசிய அமெரிக்கர்கள் ஆகியோருக்கு எதிராக இழைக்கப் படும் வெறுப்பு சார்ந்த குற்றங்களின் அதிகரிப்பைத் தடுப்பதற்காக வேண்டி சமீபத்தில் அமெரிக்காவின் கீழவை ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
    • அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளிலும், கலிபோர்னியாவில் தான் அதிகம் வெறுப்பு சார்ந்த குற்றங்கள் (Hate Rimes) இழைக்கப்படுகின்றன.
  • தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி (FirstRand Bank) 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளது.
    • சிட்டிகுரூப் வங்கியினை அடுத்து இந்தியாவை விட்டு வெளியேறிய இரண்டாவது உலகளாவிய வங்கி ஃபர்ஸ்ட்ரேண்ட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்