TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 30 , 2021 1215 days 475 0
  • இந்தோனேசியக் கடற்படைக்குச்  சொந்தமான ‘கே.ஆர்.ஐ.  நங்கலா – 402’ எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் மீட்புப் பணிகளில் இந்திக்ய கடற்படையும் இணைந்துள்ளது.
    • இந்தோனேசியாவின் 44 வருட பழமையான இந்த நீர்மூழ்கிக் கப்பலானது பாலி தீவிற்கு வடக்கே மேற்கொண்டிருந்த கடற்கணை (Torpedo) போர்ப் பயிற்சியின் போது காணாமல் போனது.
  • CBNAAT என்பது கோவிட்-19 தொற்றுப் பரிசோதனைக்கான ஒரு மாற்று கலன் சார்ந்த நியூக்ளிக் அமில பெருக்கச் சோதனையாகும் (Cartridge Based Nucleic Acid and Amplification Test – CBNAAT).
    • இது விரைவான சோதனை முடிவுகளைத் தருவதாகவும் இதற்கான கருவிகள் நாடு முழுவதும் எளிதாகக் கிடைக்கின்றன எனவும் கூறப்படுகிறது.
  • வருணா-2021” எனப்படும் 19வது இந்திய மற்றும் பிரஞ்சு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது அரபிக் கடலில் தொடங்கப்பட்டுள்ளது.
    • கடல்சார் துறைகளில் பாதுகாப்பு, அமைதி மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்த ஒருங்கிணைந்த சக்தியாக தங்கள் திறனை நிரூபிக்க இரு நாட்டுக் கடற்படைகளும் தங்களது போர்த் திறன்களை மேம்படுத்த முயற்சிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்