TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 2 , 2021 1213 days 704 0
  • வைசாலி S. ஹிவாஷே என்பவர், இந்தியாவின் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் (BRO) தலைமை அலுவலராக நியமிக்கப்பட உள்ள முதல் பெண் அலுவலர் ஆவார்.
    • இந்தோ-சீன எல்லைப் பகுதியின் சாலைகள் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையே தொடர்பினை உருவாக்குவதற்கான பொறுப்பு இவருக்கு வழங்கப்படும்.
  • சிவாலிக் சிறு நிதி வங்கியானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 முதல் ஒரு சிறு நிதி வங்கியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
    • சிறு நிதி வங்கியாக (Small Finance Bank – SFB) செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி இதுவாகும்.
  • பெங்களூருவிலுள்ள வனவிலங்கு ஆய்வு மையத்தில் (Centre for Wildlife Studies – CWS) தலைமை வளங்காப்பு அறிவியலாளராக பணிபுரியும் டாக்டர் கீர்த்தி K. கரந்த் அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான வனக் கண்டுபிடிப்பாளர் விருதினைப் பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண்மணி ஆவார்.
    • இந்த விருது “WILD ELEMENTS FOUNDATIONS” எனும் நிறுவனத்தால் வழங்கப் படுகிறது.
  • தானியங்கு வாகனங்களை குறைவான வேகத்தில் இயக்குவதற்கான கட்டுப்பாட்டுகளை அறிவித்த முதல் நாடு ஐக்கிய ராஜ்ஜியமாகும்.
    • அந்த வேக வரம்பானது மணிக்கு 37 மைல்கள் எனவும் அவை சாலையின் ஒரு பாதைக் கோட்டில் (lane) மட்டுமே இயங்க வேண்டும் எனவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
  • அமெரிக்காவின் மக்கள் தொகையானது 7.4% உயர்ந்துள்ளதாக மத்திய அமெரிக்க வாரியம் (Central Bureau of United States) சமீபத்தில் அறிவித்துள்ளது.
    • பெரும் பொருளாதார வீழ்ச்சி காலத்திற்குப் பிறகு அமெரிக்க மக்கள்தொகையில் ஏற்பட்ட இரண்டாவது குறைவான வளர்ச்சி வீதம் இதுவாகும்.
  • கௌரி அசோகன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான மாநில ஆணையத்தினை தமிழக அரசு சமீபத்தில் மீண்டும் அமைத்துள்ளது.
    • இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குப் பதவியிலிருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்