TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2021 1205 days 537 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation – WTO) அறிவுசார் சொத்துரிமைகளின் மீதான் தள்ளுபடிக்கான கோரிக்கையை முன்மொழிந்து உள்ளன.
    • உலகளவில் கோவிட்- 19 தடுப்பு மருந்துகள் மீதான காப்புரிமையினைத் தள்ளுபடி செய்வதற்கு ஆதரவளிப்பதாகவும் அது பற்றி உலக வர்த்தக அமைப்பில் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள இருப்பதாகவும் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் நிர்வாகமானது அறிவித்துள்ளது.
  • ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகரான டைலர் பெர்ரி என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஜீன் ஹெர்சோல்ட் மனிதநேய விருதினைப் பெற்றுள்ளார்.
    • இவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலங்களில் பொழுதுபோக்கு (திரைப்படதம்) துறையின் மீட்சிக்கு ஒரு முதன்மை ஆதரவாளராக திகழ்கிறார்.
  • இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான S. ஜெய்சங்கர் அவர்கள் லண்டனில் காணொலி மூலம் நடைபெற்ற G7 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
    • அவர் இந்த நிகழ்ச்சி நிரலில் COVAX எனப்டும் உலகளாவிய தடுப்பு மருந்து விநியோகத் திட்டத்திற்கான ஆதரவை அதிகரிப்பது குறித்தும் பெண்களின் கல்வி, தடுப்புக் காவல் மற்றும் ஊடக சுதந்திரம் போன்றவற்றோடுத் தடுப்பு மருந்துகளை நியாயமான முறையில் பெறுவதை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தார்.
  • சீனா-ஆஸ்திரேலியா உத்திசார் பொருளாதார பேச்சுவார்த்தையின் கீழான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா “காலவரையரையின்றி” நிறுத்தியுள்ளது.
    • சமீபத்திய வர்த்தக தடைகளானது மதுபானம், பார்லி மற்றும் நிலக்கரி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல முக்கிய தொழில்துறைகளை வெகுவாகப் பாதித்துள்ளது.
  • உயிரைக் கொல்லும் மருந்து ஊசிகள் கையில் இருப்பில் இல்லாத போது துப்பாக்கிச் சுடும் வீரர்களைக் கொண்டு கைதிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதை அனுமதிக்கும் மசோதா ஒன்றினை தெற்கு கரோலினாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இயற்றி உள்ளனர்.
    • இந்த மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், மரண தண்டனையை விதிப்பதற்கான முறைகளுள் ஒன்றாக இந்த முறையை ஏற்றுக் கொண்ட அமெரிக்காவின் 4வது மாகாணமாக தெற்கு கரோலினாவானது உருவெடுக்கும்.
  • G7 வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பின் பின்னணியில் இந்தியா-பிரான்சு-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சரவைகளின் முதலாவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையானது ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள லண்டனில் நடத்தப் பட்டது.
    • இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சரான டாக்டர் S. ஜெய்சங்கர், பிரான்சின் ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சரான திரு. ஜீன் யவ்ஸ் லே டிரையன் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சரான மேலவை உறுப்பினர் மரைஸ் பெய்ன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்