TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2021 1203 days 578 0
  • 2021 ஆம் ஆண்டின் உலக இடம்பெயரும் பறவைகள் தினமானது உலகம் முழுவதும் மே 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
    • இடம்பெயரும் பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றைப் பாதுகாப்பதில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினுடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதுமே இந்த தினம் அனுசரிக்கப் படுவதன் நோக்கமாகும்.
  • இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்கள் சரணடைந்ததை நினைவு கூறும் வகையில் ரஷ்ய நாட்டில் வெற்றி தினமானது (Victory day) கொண்டாடப் படுகிறது.
    • 2021 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியானது இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 76வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • இந்தோனேசியாவிலுள்ள சினாபங்க் எரிமலையானது சமீபத்தில் வெடித்தது.
    • கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலையானது 2010 ஆம் ஆண்டிலிருந்து வெடிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்