TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 13 , 2021 1202 days 615 0
  • அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பு மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகியவை ஒன்றிணைந்து இணையதள வெள்ள முன்னெச்சரிக்கை (முன்னறிவிப்பு) முறை ஒன்றினை உருவாக்கியுள்ளன.
    • வெள்ளத்தின் போது ஏற்படும் தாக்கங்களின் குறிகாட்டிகளைக் கண்டறிவதற்கு டிஜிட்டல் முன்னெச்சரிக்கை முறையினைப் பின்பற்றும் முதலாவது மாநிலமாக அசாம் மாநிலம் திகழ்கிறது.
  • ஃபைசர்-பயோன்டெக் எனும் கோவிட்-19 தடுப்பு மருந்தினை 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்குச் செலுத்துவதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
    • முன்னாள் தமிழக முதலமைச்சரும் அ...தி.மு.க கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் தமிழக சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி. செழியன் அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் தி.மு.க கட்சியினைச் சேர்ந்த திருவிடைமருதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார்.
  • ஒருங்கிணைந்த முப்படைகளின் (மருத்துவம்) துணைத் தளபதியான கனித்கர் அவர்கள் ஆயுதப் படைகளிலேயே மூன்று நட்சத்திரத் தகுதியுடைய படைத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்ற மூன்றாவது பெண் ஆவார்.
    • துணைக் கடற்படைத் தலைவரான  டாக்டர். புனிதா அரோரோ மற்றும் விமானப் படைத் தலைவர் பத்மாவதி பந்தோபத்யாய் ஆகியோர் இந்த வகையிலான பொறுப்பினை ஏற்ற முதல் இரண்டு பெண்மணிகளாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்