TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 14 , 2021 1201 days 654 0
  • 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் வருடாந்திர நினைவு நாளில் ஐ.நா.வின் பொதுச் செயலாளரான அண்டோனியா குட்டெரஸ் அவர்கள் ஐ.நா. அமைப்பிற்கான இந்தியாவின் அமைதிக் காப்புப் பணி அதிகாரியான யுவராஜ் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • அவர் 2020 ஆம் ஆண்டில் தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் தருவாயில் உயிரிழந்தார்.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக் காலங்களில் தங்களது அத்தியாவசிய தேவைகளைப் பெற சிரமப்படும் முதியவர்க்களுக்கு உதவுவதற்காக டெல்லி காவல் துறையானது ஒரு உதவி எண்ணினை அறிவித்துள்ளது.
    • தேசியத் தலைநகரின் தென்மாவட்டக் காவல் துறையானது முதியவர்களுக்காக
    • COVI Van என்பதின் ஒரு உதவி எண்ணினை (012 – 26241077) அறிவித்துள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியின் பத்மகுமார் மாதவன் நாயர் அவர்கள் மோசமான வங்கி என்ற ஒரு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மோசமான வங்கி என்பது தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தினால் (National Asset Reconstruction Company – NARC) உருவாக்கப்பட்டுள்ள நிறுவனமாகும்.
  • நேபாளப் பிரதமர் சர்மா ஓலி அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து நேபாளக் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி அவர்கள் சமீபத்தில் அந்நாட்டின் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார்.
    • ஒத்தி வைப்பு என்பது பாராளுமன்றம் () சட்டமன்றத்தின் கூட்டத்தை நிறுத்தி வைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்