TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2021 1196 days 595 0
  • வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு வீரர் எனும் ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
    • மார்ச் மாதத்தில் நடைபெற்ற புத்தாபெஸ்ட் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சரி செய்யப்பட்ட அதிகாரப் பூர்வ தரவரிசை (Adjusted Official Ranking – AOR) முறையின் மூலம் இவர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
  • அமைதி, சகிப்புத் தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல், புரிதல் மற்றும் ஒற்றுமை போன்றவற்றை மேம்படுத்துவதில் சர்வதேச சமூக அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஒன்று திரட்டுவதற்கான ஒரு உபாயமாக மே 16 ஆம் தேதியினை அமைதியில் ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அறிவித்துள்ளது.
    • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையனது மே 16 ஆம் தேதியினை அமைதியில் ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக கடைபிடிப்பதற்கான முடிவினை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று மேற்கொண்டது.
  • 1960 ஆம் ஆண்டில் இயற்பியல் வல்லுநரும் பொறியாளருமான தியோடர் மெய்மன் என்பவர் மேற்கொண்ட முதலாவது வெற்றிகரமான லேசர் செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆம் தேதியன்று சர்வதேச ஒளி தினமானது கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டின் சர்வதேச ஒளி தினத்திற்கான கருத்துரு, “Trust Science” (அறிவியலை நம்புங்கள்) என்பதாகும்.
  • ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில் சில்பா மெடிகேர் எனும் ஒரு இந்திய நிறுவனமும் அதற்காக இணைந்துள்ளது.
    • இந்தியாவில் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் மருத்துவச் சோதனைகளை மேற்கொள்ளவும், அதன் விநியோக உரிமைகளைப் பெற்றிடவும் வேண்டி ஹைதராபாத்தில் அமைந்துள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகமானது கடந்த ஆண்டில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்