TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2021 1194 days 633 0
  • நாடு கடந்த திபெத்தியப் பாராளுமன்றத்தின் (Tibet’s parliament-in-exile) முன்னாள் சபாநாயகரான பென்பா செரிங் அவர்கள் நாடு கடந்த திபெத்திய அரசின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • அரசியலிலிருந்து தலாய் லாமா விலகியதையடுத்து தலைமைப் பொறுப்பிற்கு நடத்தப்படும் மூன்றாவது நேரடி தேர்தல் இதுவாகும்.
  • பஞ்சாபில் இஸ்லாமிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரமான மலெர்கோட்லா என்ற நகரமானது அந்த மாநிலத்தின் 23வது மாவட்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
    • இது சங்க்ரூர் என்ற மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பு மருந்துகள் மீதான அறிவுசார் சொத்துரிமையின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கையை (TRIPS - Trade-Related Aspects of Intellectual Property Rights) தற்காலிகமாக தள்ளுபடி செய்வதற்கான இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு முன்மொழிதலுக்கு சீனா ஆதரவு அளிக்க உள்ளது.
  • ஈரான் அரசானது ஒரு மாபெரும் எரிவாயுக் கிணற்றை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஒரு உள்ளுர் நிறுவனத்தற்கு வழங்கியதையடுத்து பாரசீக வளைகுடாவில் ONGC விதேஷ் நிறுவனம் கண்டறிந்த பர்ஷத்-பி என்ற ஒரு எரிவாயுக் கிணற்றின் மீதான உரிமையை இந்தியா இழந்துள்ளது.
    • அந்த நிலையத்தை மேம்படுத்துவதற்காக பெட்ரோபார்ஸ் (Petropars) எனும் குழுவுடன் ஈரான் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியம் தான் விதித்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்றவற்றை விரைவில் திறப்பதற்கு வேண்டிய ஒரு அனுமதியினை வழங்கியுள்ளது.
    • இந்தக் கட்டுப்பாட்டு விதிகள் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் ஆகிய இடங்களில் தளர்வு படுத்தப் பட்டுள்ளன.
  • கேரள அரசானது ஒரு சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த அரசியல் தலைவரை அம்மாநிலத்தின் தேவஸ்வம் அமைச்சராக (Devaswom ministry) நியமித்து வரலாறு படைத்துள்ளது.
    • மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் K. இராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய அமைச்சரவையில்  தேவஸ்வம் அமைச்சகத்தின் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்