TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 22 , 2021 1193 days 626 0
  • இந்திய அரசானது உரங்களுக்கான மானியத்தை மூட்டைக்கு ரூ.1200 என உயர்த்தி உள்ளது.
    • இதற்கு முன்பாக மூட்டைக்கு ரூ.500 என்ற அளவில் மானியம் வழங்கப்பட்டு வந்தது, எனவே இத்துடன் மானியமானது 140% வரை உயர்த்தப் பட்டிருக்கின்றது.
  • இராஜஸ்தான் அரசானது மியூகோர்மைகோசிஸ் (அ) கருப்புப் பூஞ்சை நோயினைத் தொற்று நோயாக அறிவித்துள்ளது.
    • இராஜஸ்தானைத் தவிர பல மாநிலங்களிலும் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.
  • ஆசிய–பசிபிக் பகுதியிலேயே இரண்டாவது மிகப்பெரிய காப்பீட்டுத் தொழில் நுட்பச் சந்தையாக இந்தியா விளங்குகிறது.
    • இது S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜன்ஸ் எனும் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் மே 20 ஆம் தேதியன்று  உலக அளவியல் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
    • 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவியல் தினத்தின் கருத்துரு, “ஆரோக்கியத்திற்கான அளவீடு” (Measurement for Health) என்பதாகும்.
  • நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சூரியனைச் சுற்றி வரும் விண்கலமானது சூரியனின் மேற்பரப்பில் நிகழும் சூரிய வெடிப்பினை முதன்முறையாக படம் பிடித்துள்ளது.
    • இந்த வெடிப்புகளானது ஒளிவட்ட நிறை வெளியேற்றம் (Coronal Mass Ejections) எனவும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்