TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2021 1192 days 645 0
  • தமிழக அரசானது கருப்புப் பூஞ்சை (மியுகோர்மைகோசிஸ்) நோயினை 1897 ஆம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் ஒரு அறிவிக்கப்பட்ட நோயாகப் பட்டியல் ட்டுள்ளது.
    • ஏற்கனவே தெலுங்கானா மாநில அரசானது 1897 ஆம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கருப்புப் பூஞ்சை நோயினை ஒரு அறிவிக்கப்பட்ட நோயாகப் பட்டியலிட்டுள்ளது.
  • பல்லுயிர்ப் பெருக்கத்தினைப் பற்றிய ஒரு புரிதலையும் விழிப்புணர்வினையும் அதிகரிக்க வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பானது மே 22 ஆம் தேதியினை சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினமாக அறிவித்துள்ளது.
    • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, நாம் தீர்வுகளின் ஓர் அங்கமாவோம்” (We are part of solution) என்பதாகும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி தஷி யங்ஜோம் என்பவர் 2021 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
    • இவர் அருணாச்சலப் பிரதேசத்தின் திராங்க்கிலுள்ள (Dirang) தேசிய மலையேற்றம் மற்றும் மலையேற்றம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் என்ற நிறுவனத்தில் (National Institute of Mountaintering & Allied Sports – NIMAS) பயிற்சி அளிக்கப் பெற்றார்.
  • கோவிட் – 19 தொற்றின் மீது ஒரு விரைவான ஆண்டிஜன் எனும் சோதனையினை மேற்கொள்வதற்காக கோவிசெல்ஃப் எனும் இந்தியாவின் முதல் சுயப் பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து ஒப்புதல் பெற்று விட்டதாக மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இந்தக் கருவிகளை மருந்துக் குறிப்பு எதுவுமின்றி உள்ளூர் மருந்தகங்களிலேயே 250 ரூபாய்க்கு வாங்க இயலும்.
  • மார்த்தா கரம்பு கூமே என்பவர் கென்யாவின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.
    • அந்நாட்டு அரசின் மூன்று பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்ற முதல் பெண்மணியும் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்