TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 26 , 2021 1189 days 577 0
  • கேரளாவில் கிழங்குப் பயிர்களின் நாயகன்  என அன்போடு அழைக்கப்படுகின்ற N.M. சாஜி அவர்களுக்கு “Conservation of domesticated species” (உள்நாட்டு உயிரினங்களைப் பாதுகாத்தல்) எனும் தனிப் பிரிவில் 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பல்லுயிர்ப் பெருக்க விருதானது வழங்கப் பட்டுள்ளது.  
    • மேலும் இவர் புதுடெல்லியிலுள்ள PPV&FR ஆணையத்தால் தொடங்கப்பட்ட தாவரக் குடும்ப இனங்காப்பாளர் விருது 2015 உட்பட பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
  • இந்தியாவில் காமன்வெல்த் தினமானது மே 24 அன்று கொண்டாடப் படுகின்றது.
    • பேரரசு தினம் எனவும் அறியப்படும் இந்த காமன்வெல்த் தினமானது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப் பட்டதையும் பிரிட்டனின் ஏனைய பிற காலனி ஆட்சிகள் நிறுவப்பட்டதையும் நினைவு கூறுகிறது.
  • கோவிட்-19 தொற்று இருக்கிறதா என சோதித்து ஒரு நிமிடத்திற்குள்ளேயே துல்லியமான முடிவுகளை அளிக்கும் கோவிட் சுவாசப் பரிசோதனைக்கு சிங்கப்பூர் அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தப் பரிசோதனை முறையானது Breathonix எனப்படும் ஒரு புத்தாக்க நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது ஆகும்.
  • அனா எனப்படும் துணை வெப்பமண்டலப் புயலானது பெர்முடா பகுதியில் மழைப் பொழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலினூடே வடகிழக்கு நோக்கி நகர்வதாக மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் அறிவித்துள்ளது.
    • எனவே இந்தப் பருவத்தின் முதல் புயலாக பெயரிடப்பட்ட இந்த அட்லாண்டிக் புயலானது நிலப் பகுதிக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல் விரைவில் கலைந்து விடும்.
  • “India and Aisan Geopolitics : The Past, Present” என்று தலையிடப்பட்ட ஒரு புத்தகத்தினை சிவசங்கர் மேனன் அவர்கள் எழுதியுள்ளார்.
    • இவர் பிரதமரின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுத் துறைச் செயலாளரும் ஆவார்.
  • “Nehru, Tibet and China” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தினை அவ்தார் சிங் பசீன் அவர்கள் எழுதியுள்ளார்.
    • இப்புத்தகத்தில் 1949 முதல் 1962 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்திய சீனப் போர் வரையிலான நிகழ்வுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பற்றி கூர்ந்து ஆராயப் பட்டுள்ளது.
  • உலகப் பாரம்பரியத் தளக் குறியீட்டைப் பெறுவதற்காக தனது மாநிலத்தின் 14 கோட்டைகளின் பெயர்கள் அடங்கிய ஒரு தற்காலிகப் பரிந்துரை தொடர் வரிசைப் பட்டியலை மகாராஷ்டிர அரசானது தயாரித்துச் சமர்ப்பித்துள்ளது.
    • இவை பேஷ்வா ஆட்சிக் காலத்தை () மராத்தியர் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போர்களைக் குறிப்பதாக இருப்பதோடு, அதில் சில கோட்டைகள் மராத்திய வீரர்களுக்கான கடற்படை () இராணுவத் தளங்களாகவும் விளங்கின.
  • ஃபோர்ப்ஸ் நிறுவனமானது அதிக சம்பளம் வாங்கும் பத்து விளையாட்டு வீரர்களின் வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • UFC அணியின் நட்சத்திர வீரரான கோனெர் மெக்கிரிகர் (Conor McGregor) என்பவர் கடந்த ஆண்டில் 180 மில்லியன் டாலர் தொகையைச் சம்பளமாகப் பெற்று கால்பந்து விளையாட்டு விரர்களான லியோனெல் மெஸ்ஸியையும் (130 மில்லியன் டாலர்) கிறிஸ்டியானோ ரொனால்டோவையும் (120 மில்லியன் டாலர்) வீழ்த்தி உலகிலேயே அதிகளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • அத்லெடிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணியானது ரியல் மாட்ரிட் அணியைத் தோற்கடித்து லா லிகா கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தினை வென்று உள்ளது.
    • லூயிஸ் சுவாரெஷ் என்பவர் 2-1 என்ற கோல்  கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை தோற்கடித்து தமது அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்