TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2021 1187 days 588 0
  • கோவிட்-19 பெருந்தொற்றினாலும் அதன் இரண்டாவது அலையினாலும் இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    • இத்துடன் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்த எண்ணிக்கையைக் கடந்த மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • வின்டோஸ் 10 மென்பொருளின் சில பதிப்புகளில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 எனும் கணினி  உலாவிகள் (Browser) 2022 ஆம் ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி முதல் செயல்படாது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
    • இருப்பினும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைச் சார்ந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் 2029 ஆம் ஆண்டு வரை “New Microsoft Edge” எனும் செயல்முறையில் இயங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது 2021 ஆம் ஆண்டு மே 25 முதல் மே 31 வரை சுயராஜ்ஜியமற்ற பிராந்திய மக்களுடனான சர்வதேச ஒற்றுமை வாரத்தினை (International Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories) அனுசரிக்கிறது.
    • ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனத்தின் படி, சுயராஜ்ஜியமற்ற பிராந்தியங்கள் என்பது மக்கள் முழு அளவிலான சுயராஜ்ஜியத்தை அடையாத பிராந்தியங்கள் ஆகும்.
  • நாய்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படும் CCoV-HuPn-2018 எனும் புதிய வகை கொரோனா வைரசானது 2017-2018 ஆம் ஆண்டில்  நிமோனியா நோய் சிகிச்சைக்காக வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சில நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப் பட்டது.
    • இது ஒரு நோய்க் கிருமி என உறுதி செய்யப்பட்டால் மனிதனில் நோயை உண்டாக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த எட்டாவது கொரோனா வைரஸ் வகையாக இது இருக்கும்.
  • ஹரியானாவின் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அவர்கள்சஞ்சீவனி பரியோஜனாஎனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • கிராமப்புறப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான அறிகுறிகளை உடைய மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குச் செல்லாமலேயே விரைவான மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கு இந்த முன்னெடுப்பானது வழிவகை செய்யும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான பில்போர்டு இசை விருதுகள் மே 23 ஆம் தேதியன்று நிறைவடைந்தது.
    • இந்த ஆண்டு BTS இசைக் குழுவானது முன்னணி இரட்டை/குழு, விற்பனையில் முன்னணியிலுள்ள பாடல் கலைஞர், முன்னணி சமூக கலைஞர் மற்றும் விற்பனையில் முன்னணியிலுள்ள பாடல் போன்றவற்றிற்குப் பரிந்துரைக்கப் பட்டு அந்த நான்கு விருதுகளையும் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்