TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2021 1186 days 633 0
  • பருவநிலை மாற்றம், காட்டுத் தீ மற்றும் புயல்கள் போன்ற இடர்களைத் தணிப்பதில் உதவும் ஒரு புதிய புவி அமைப்பு ஆய்வகத்தினை நாசா அமைத்துள்ளது.
    • இது நிகழ் நேர வேளாண்மைக்கும் உதவியாக இருக்கும்.
  • பானேசியா பயோடெக் (இந்திய மருந்து உற்பத்தியாளர்) நிறுவனமானது ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்புட்நிக் V கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
    • பானேசியா மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை இந்தியாவில் ஓர் ஆண்டிற்கு 100 மில்லியன் அளவிலான ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான தங்களது திட்டத்தை அறிவித்துள்ளன.
  • இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் அந்நாட்டின் உளவு அமைப்பான மொசாட்டின் புதிய தலைவராக டேவிட் பார்னியா அவர்களை நியமித்துள்ளார்.  
    • முன்னாள் நெடுங்கால மொசாட் இயக்குநரான பார்னியா அவர்கள் யோஷி கோஹெனையடுத்து இஸ்ரேலின் உளவு அமைப்பினுடையத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • சிரியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலானது பத்து வருடத்திற்கு முன்பு சிரியாவில் போராக உருமாறிய கிளர்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது தேர்தலாகும்.
    • சமீபத்திய தேர்தலிலும் அதிபர் பசார்-அல் ஆசாத் அவர்கள் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்