TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2021 1185 days 622 0
  • மாநிலத்தில் பொலிவுறு (நவீன) சமையலறைத் திட்டத்தினை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைகளையும் உருவாக்குவதற்கு வேண்டி செயலர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
    • இந்தத் திட்டத்தின் கீழ் அந்த மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு அவர்களது சமையலறையைப் புதுப்பிப்பதற்காக வேண்டி கடன் வழங்கப்படும்.
  • வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தினை ஒரு வாகனத்திற்கு 10 விநாடிகள் எனக் குறைக்குமாறு சுங்கச் சாவடிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (Indian Institute of Technology, Mandi) ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசினுடைய முக்கியப் புரத அமைப்பின் ஒரு பகுதியை வெளிக் கொணர்ந்து ள்ளனர்.
    • கொரோனா வைரசினுடைய புரத அமைப்பானது, கோவிட்-19 தொற்றுநோயில் அதன் செயல்பாடு மற்றும் நோயின் பரவல் மற்றும் தீவிரத்தன்மையில் அதன் பங்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை முறைகளை உருவாக்கவும் உதவுகிறது.
  • சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதிகாப்புப் படையினர் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மே 29 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நீடித்த அமைதிக்கான பாதை : அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இளைஞர்களின் சக்தியை வலுப்படுத்துதல்என்பதாகும்.
  • உலக இரையகக் குடலியவியல் அமைப்பினால் (World Gastro Enterology Organisation – WGO) தொடங்கப்பட்ட உலக செரிமான ஆரோக்கிய தினமானது மக்கள் எதிர்கொள்ளும் செரிமான நோய் () கோளாறு குறித்து அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே 09 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உடல் பருமன்: நடப்பிலிருக்கும் ஒரு பரவலான நோய்என்பதாகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மற்றும் அவற்றின் சேமிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, பாரத் ரத்னா விருது பெற்ற பேராசிரியர் C.N.R. ராவ் அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டின் சர்வதேச ENI விருது வழங்கப்பட்டுள்ளது.
    • பேராசிரியர் C.N.R. ராவ் அவர்கள் மனித குலத்திற்குப் பயன்தரும் வகையில் ஹைட்ரஜன் ஆற்றல் ஒன்றையே ஒரே ஒரு ஆற்றல் மூலமாக மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
  • கோவிட்-19 வைரசை சமநிலைப்படுத்தும் ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் சிகிச்சை (ZRC – 3308) முறையினை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்துவதற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாடு அமைப்பிடம் (DGCI) ஒப்புதல் கோரி உள்ளதாக சைடஸ் கேடிலா நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இத்தகைய ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் சிகிச்சை முறையை உருவாக்கிய ஒரே இந்திய நிறுவனம் சைடஸ் கேடிலா ஆகும்.
  • பிரான்சு நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரான் அவர்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்சின் பங்கு இருந்ததை உறுதி செய்து அதற்காக வேண்டி மன்னிப்பினையும் கோரியுள்ளார்.
    • இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 2,50,000 பேரின் உடல்கள் புதைக்கப் பட்டிருக்கும் கிகாலி இனப்படுகொலை நினைவிடத்தில் ஆற்றிய உரையில் அவர் இதனைக் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்