TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 31 , 2021 1184 days 598 0
  • எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனமானது ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல்நிலை உந்திகளின் உதவியுடன் 60 ஸ்டார்லிங்க் அகண்ட அலைவரிசை (Broad Band) செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி அவற்றைச் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
    • இந்தச் செயற்கைக் கோள்கள் அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள 40 என்ற விண்வெளி ஏவுதள வளாகத்திலிருந்து ஏவப்பட்டன.
  • ஆன்டி ஜெசி என்பவர் அமேசானின் தலைமை நிர்வாக இயக்குநராக அதிகாரப் பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார்.
    • அமேசானின் இணையதள சேவையின் தற்போதைய தலைமை நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆன்டி ஜெசி அவர்கள் ஜெஃப் பெசோசினையடுத்து பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
  • கலைசார்ந்த வரலாற்று ஆசிரியரும் அருங்காட்சியக மேற்பார்வையாளருமான லாரன்ஸ் டெஸ் கார்ஸ் அவர்கள் லூவ்ரே என்ற அருங்காட்சியகத்தின் 228 ஆண்டு கால வரலாற்றிலேயே அதன் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
    • லூவ்ரே அருங்காட்சியகமானது பிரான்சின் பாரீசிலுள்ள உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்