TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2021 1183 days 702 0
  • உலக சுகாதார அமைப்பும் குளோபல் பார்ட்னர்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் மே 31 ஆம் தேதியினை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கின்றன.
    • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Commit to quit” (நிறுத்துவதற்கு தயாராகுங்கள்) என்பதாகும்.
  • சைடஸ் கேடிலா எனும் ஒரு மருந்து நிறுவனமானது தனது முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளை தொகுத்துப் பொதியமைப்பதற்காக வேண்டி புதிய அம்சம் ஒன்றினை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இது மருந்துப் பொருட்கள் போலியானவை அல்ல (அ) கலப்படம் செய்யப்பட வில்லை என்பதை உறுதி செய்வதற்கு வேண்டி நோயாளிகளுக்கு உதவும்.
  • சீனாவில் கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டறிய அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஆணையிட்டதை அடுத்து இந்தியாவும் தனது ஆதரவை அதற்கு வழங்கியுள்ளது.
    • 2019 ஆம் ஆண்டின் பிற்காலத்தில் சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒரு ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தால் தோன்றியதா () ஒரு விலங்கின் மூலம் தோன்றியதா என்பதை விசாரிக்க அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தி இருந்தன.
  • ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்தின் மீதான பயன்பாட்டிற்கு ஐக்கிய ராஜ்ஜியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • பிரிட்டனில் அனுமதிக்கப் பட்ட முதல் ஒற்றைத் தவணைத் தடுப்பூசி இதுவாகும்.
  • தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 14வது IPL தொடரின் எஞ்சியப் போட்டிகளை நடத்துவதற்கான திட்டத்தினை BCCI அறிவித்துள்ளது.
    • இந்தப் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை நடத்தப் படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு உளவுத்துறை தலைவர் சமந்த் குமார் கோயல் மற்றும் இந்திய உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் ஆகியோரின் பதவிக் காலமானது இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கடைசி திங்கள் கிழமையன்று (மே 31, 2021) தேசிய நினைவக தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
    • கோவிட்-19 பெருந்தொற்றினை எதிர்கொள்வதில் நமக்காக உழைக்கும் ஆண் மற்றும் பெண் ஆகிய அனைவருக்கும் இந்த தினமானது மரியாதை செலுத்துவதோடு இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்கள், மூத்த வீரர்கள், காயமடைந்த வீரர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வேண்டிய மரியாதையையும் இத்தினம் செலுத்துகிறது.
  • கிறிஸ்டியன் வோர்முத் என்பவர் அமெரிக்க இராணுவத்தின் முதல் பெண் செயலாளராக அமெரிக்க மேலவையினால் ஒருமனதாக நியமிக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்