TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2021 1182 days 652 0
  • நாசா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கியூரியாசிட்டி எனும் விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தின் மீது நிலவும் பிரகாசிக்கும் மேகங்களின்புகைப்படங்களை எடுத்துள்ளது.
    • கியூரியாசிட்டி எனும் கலமானது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிலுள்ள காலே என்ற  பள்ளத்தினைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மகிழுந்தின் அளவைக் கொண்ட சுற்றித் திரியும் ஒரு விண்கலமாகும்.
  • துபாயில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு ஆசியக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் அவர்கள் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
    • கஜகஸ்தானைச் சேர்ந்த இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நாஷ்யம் கியசைபை (Nazym Kyzaibay) என்பவரிடம் இவர் தோல்வியடைந்தார்.
  • குழந்தைகளுக்காகவே என்று தனது வாழ்வை அர்ப்பணிக்கும் அனைத்துப் பெற்றோர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 01 ஆம் தேதியன்று உலகளாவிய பெற்றோர் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
    • இது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுசரிக்கப்படும் ஒரு தினமாகும்.
  • ஜுன் 01 ஆம் தேதியன்று உலகப் பவளப்பாறை விழிப்புணர்வு தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • நமது பூமியிலுள்ள பெருங்கடல்களில் காணப்படும் பவளப் பாறைகளினுடைய பலவீனமான உயிரி அமைப்புப் பற்றி பல்வேறு வர்த்தகச் சமூகத்தினரிடமும் பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது உதவுகிறது.
  • மேகாலயாவின் முதலமைச்சர் கான்ராட் K. சங்க்மா அவர்கள் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட ஓர் அமைச்சர்கள் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது.
    • இது தடுப்பு மருந்துகள், பிற மருந்துகள், சோதனைக் கருவிகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற கோவிட்-19 தொற்று சிகிச்சைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு GST விலக்கு அளிப்பது பற்றி விவாதிப்பதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
  • “Languages of Truth : Essays 2003 – 2020” எனத் தலைப்பிடப்பட்ட புத்தகமானது சல்மான் ருஷ்டீ என்பவரால் சமீபத்தில் எழுதப் பட்டதாகும்.
    • கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் 5 மில்லியன் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக நாடு தழுவிய இளம் போராளி எனும் இயக்கம் (Young Warrior movement) ஒன்றினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE) தொடங்கி உள்ளது.
  • 10 முதல் 30 வயதிற்குட்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களையும், தங்கள் குடும்பத்தினையும், தங்கள் சமூகத்தினையும் மற்றும் நாட்டினையும் பாதுகாக்க வேண்டி இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம்.
  • வாகனக் கடன் துறைக்கான விதிமுறைகளை மீறியதற்காக HDFC வங்கியின் மீது 10 கோடி ரூபாய் அபராதத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது விதித்துள்ளது.
    • இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 1949 ஆம் ஆண்டு வங்கி விதிமுறைச் சட்டத்தின் பிரிவு 6(2) மற்றும் பிரிவு 8 ஆகியவற்றின் விதிமுறைகளை HDFC வங்கி மீறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்