TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 3 , 2021 1181 days 619 0
  • சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியான்ங்சூ என்ற பகுதியில் H10N3 பறவைக் காய்ச்சலின் முதல் தொற்று பதிவாகியுள்ளது.
    • H10N3 என்பது மிகக் குறைவான அளவிலேயே நோயுண்டாக்கக் கூடிய () குறைந்த அளவே வீரியமுடைய ஒரு தீநுண்மி ஆகும்.
  • SARS–CoV-2 என்ற தீநுண்மியினால் பாதிக்கப்பட்ட எலிகளில் தீவிரமான கோவிட்-19 தொற்றினைத் தடுப்பதில் மிகவும் செயல்திறன் வாய்ந்த புதிய மருந்து ஒன்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • கண்டறியப் பட்ட அந்த மருந்தின் பெயர் diABZI என்பதாகும்.
  • 43வது GST மன்றச் சந்திப்பிற்குப் பிறகு, கோவிட்-19 தொடர்பான பொருட்களின் மீதான இறக்குமதி வரிக்கு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 வரையில் விலக்கு அளிப்பதற்கு GST மன்றம் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார்.
    • நாட்டில் கருப்புப் பூஞ்சையின் தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மற்ற இதர கோவிட் நிவாரணப் பொருட்கள் மீதான வரிவிலக்குப் பட்டியலில் ஆம்போடெரிசின் பி எனும் மருந்தினையும் GST மன்றமானது சேர்த்துள்ளது.
  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் சந்திப்பில், ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகமானது (Unified Health Interface – UHI) விரைவில் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகம் என்பது இந்தியாவில் டிஜிட்டல் சுகாதாரத்தின் மேம்பாட்டிற்கு என்று செயல்படும் ஒரு பரவலான தகவல் தொழில்நுட்பப் பிணையமாகும்.
  • சோபோஸ் (Sophos) எனப்படும் ஒரு உலகளாவிய இணையவழிப் பாதுகாப்பு நிறுவனமானது தனது “2021 ஆம் ஆண்டு ரான்சம்வேர் நிலைஎன்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 12 மாதங்களில் 68% இந்திய நிறுவனங்கள் ரான்சம்வேரினால் தாக்கப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • ரவி சாஸ்திரி அவர்கள் “Stargazing : The Players in My Life” எனும் ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார்.
    • இந்தப் புத்தகத்தினை ஹார்பெர்கோலின்ஸ் இந்தியா எனும் பதிப்பகமானது வெளியிடுவதோடு இந்தப் புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆயாஷ் மேமோன் என்பவராவார்.
  • மெட்லைஃப் எனும் நிறுவனத்தினை கையகப்படுத்த உள்ளதாக பார்ம்ஈசி என்ற ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இதையடுத்து இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய இணையதள மருந்தகமாக உருவெடுத்துள்ளது.
  • மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநராக பணியாற்றும் குல்தீப் சிங் அவர்களுக்குத் தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பானது வழங்கப் பட்டுள்ளது.
    • இவர் Y.C. மோடி அவர்களையடுத்து இந்த கூடுதல் பொறுப்பை ஏற்க உள்ளார்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 02 ஆம் தேதியன்று சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த தினமானது பாலியல் தொழிலாளர்களின் அவல நிலையை அடையாளப் படுத்தி அவர்களைக் கௌரவிக்க அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்