TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2021 1180 days 584 0
  • டாடா ஸ்டீல் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான T.V. நரேந்திரன் அவர்கள் இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை (2021-22) ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் பேரிடர் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடங்களைச் சேர்ப்பதற்கு ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்திய ஒளிபரப்பு அமைப்பானது புதிதாக அமைக்கப் பட்ட டிஜிட்டல் ஊடகத் தகவல் கட்டுப்பாட்டு அமைப்பு எனும் அதன் சுயக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக நீதிபதி விக்ரம்ஜித் சிங் அவர்களை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாவார்.
  • பாரத் ஸ்டேட் வங்கியானது தனது ஈகோராப் (Ecowrap) எனப்படும் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் 2021-22 ஆம் ஆண்டிற்காக முன்பு கணிக்கப்பட்ட 10.4% என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தினைக் குறைத்து தற்போது 7.9% என கணித்துக் குறிப்பிட்டுள்ளது.
    • கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்ட கோவிட் சார்ந்த இறப்புகளை மாவட்ட வாரியாக ஒப்பிட்டு அது பற்றிய ஆய்வினையும் இது மேற்கொண்டு உள்ளது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது முதன்முறையாக ஆசியா பசிபிக் பொதுத்துறை இணையவழிப் பாதுகாப்பு நிர்வாக மன்றத்தினைதொடங்கியுள்ளது.
    • இணையவழிப் பாதுகாப்பில் பொது தனியார் பங்களிப்பிற்கு ஊக்கமளித்தல் மற்றும் அச்சுறுத்தல் பற்றியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மன்றம் உருவாக்கப் பட்டுள்ளது.
  • மேற்கு வங்காள தலைமைச் செயலாளரான அலபன் பந்த்யோபத்யாய் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து உடனடியாக அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் தலைமை ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் ஜுன் 01 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு அப்பதவியில் இருப்பார்.
  • சீனாவானது கடுமையான தனது இரு குழந்தைகள் கொள்கையினை ரத்து செய்து நாட்டின் ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
    • கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • சீனாவின் தியான்சூவா-2 எனும் சரக்கு விண்கலமானது புவியின் தாழ்மட்ட சுற்றுப் பாதையிலுள்ள தியான்ஹே விண்வெளி நிலையப் பெட்டகத்துடன் இணைக்கப் பட்டது.
    • இது வென்சாங் விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • 12 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த பைசர் மற்றும் பயோன்டெக் SE ஆகியவற்றின் கோவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தச் செய்வதற்கு ஐரோப்பிய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
    • பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் ஆனது ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்