TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2021 1177 days 670 0
  • சேலம் தம்மம்பட்டியில் நடமாடும் உழவர் சந்தை திட்டமானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
    • மாநிலம் முழுதும், நடமாடும் உழவர் சந்தைத் திட்டத்தை துவங்குவது என்று வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஓய்வு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான V. பழனிக்குமார் அவர்களை மாநில தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார்.
    • இவர் பதவியேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலம் வரை அந்தப் பதவியில் இருப்பார்.
  • இந்த நிதியாண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதிய வழங்கீடுகளைப் பிரித்துப் பட்டியலிடுமாறு (பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதரப் பிரிவினர்) மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
    • பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு எந்தெந்த முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டும் வகையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • தனது ஒன்றிய அமைப்பிலிருந்து மாலி நாட்டினை விலக்குவதாக ஆப்பிரிக்க ஒன்றியமானது அறிவித்துள்ளது.
    • மேலும், ஒன்பது மாதங்களில் இரண்டாவது முறையாக இராணுவ ஆட்சி தொடங்கப் பட்டதைத் தொடர்ந்து மேலும் சில தடைகள் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டிற்கு அந்த ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சரான தாவர் சந்த் கெஹ்லாட் அவர்கள் Senior Care Agening Growth Engine () SAGE எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • SAGE திட்டமானது பல்வேறு நம்பத்தகு தொடக்க நிறுவனங்களால் வழங்கப்படும் முதியோர்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் பெறும் வகையிலான ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான உதவிகளை வழங்கி அத்தகைய தளத்தை உருவாக்குவதற்காக வேண்டி தொடங்கப்பட்டுள்ளது.
  • நீலநிறத் துடுப்புடைய பெளி மீன் (Mahseer) ஆனது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலின் கீழான அருகி வரும் இனம் எனும் நிலையிலிருந்து குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் இனம் எனும் ஒரு நிலையில் (least concern) பட்டியலிடப் பட்டுள்ளதாக டாடா பவர் நிறுவனம் கூறியுள்ளது.
    • டாடா குழுமமானது பூனாவில் உள்ள லோனாவாலாவில் நீலநிறத் துடுப்புடைய மற்றும் தங்கநிறம் கொண்ட பெளி மீன்களைப் பாதுகாப்பதில் 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
  • இந்திய தொல்லியல் துறையானது மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் அமைந்துள்ள பௌத்த குகைகள் வளாகத்தில் மூன்று குகைகளை கண்டறிந்துள்ளது.
    • புத்தர் மற்றும் போதிசத்துவாக்களின் உருவப் படங்களும் இந்தோ-கிரேக்க கட்டிடக் கலையின் வடிவங்களுடன் கூடிய சிற்பங்களும் இந்தக் குகைகளில் காணப் படுகின்றன.
  • நாசாவுடன் சமீபத்தில் விண்வெளி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு நியூசிலாந்து ஆகும்.
    • ஆர்டிமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 11வது நாடு நியூசிலாந்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்