TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2021 1174 days 597 0
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது தனது முதன்மையான  ஒரு அறிக்கையான உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்எனும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையின் கருத்துரு, “வேலை சார்ந்த துறைகளை மாற்றுவதில் டிஜிட்டல் தொழிலாளர் தளங்களின் பங்கு” என்பதாகும்.
  • ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணியானது சமீபத்திய சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் தனது நான்காவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
    • அதில் மகளிர் அணியானது 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்திய அரசும், இணைந்து சிக்கிமின் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக வேண்டி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • சிக்கிமில் சாலை இணைப்புகளை மேம்படுத்துவதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கியினால் நிதி வழங்கப்படும் வடகிழக்கு மாநில சாலை முதலீட்டுத் திட்டமானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்திய மல்யுத்த வீரரான சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தனது போதை மருந்து சோதனையில் தேர்ச்சி பெறவில்லை.
    • எனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
  • 35,000 மக்கள் வசிக்கும் வகையிலான ஒரு செயற்கைத் தீவினை உருவாக்கச் செய்வதற்கான ஒரு திட்டத்திற்கு டென்மார்க் நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
    • இது கடல்மட்டம் உயர்வதினால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து கோபன்ஹேகன் துறைமுகத்தைக் காக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்