TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2021 1167 days 554 0
  • இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 4 போட்டிகள் ஜுன் 21 அன்று பாட்டியாலாவிலுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் (National Institute of Sports) நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
    • இந்திய நட்சத்திர வீரர்களான டூட்டி சந்த் மற்றும் ஹீமா தாஸ் ஆகியோர் 2021 ஆம் ஆண்டு 4வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகக் கொடுப்பனவு குறியீட்டின் படி, உலகளவில் அதிகளவு தொண்டு வழங்கும் 14வது நாடாக இந்தியா உள்ளது.
    • இந்த அறிக்கையானது சாரிட்டிஸ் எய்டு எனும் அறக்கட்டளையினால் வெளியிடப் படுகிறது.
  • தங்களது LPG கொள்கலன்களை எந்த விநியோக நிறுவனத்திடமிருந்து மறுநிரப்பல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு வேண்டி LPG வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
    • LPG நுகர்வோர்களுக்கு அதிகாரமளிக்கவும் அனைவரும் ஆற்றலை எளிதில் அணுக கூடியதாகவும் மலிவு விலை கொண்டதாகவும் மாற்றுவதற்காகவும் வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • அமெரிக்க அரசானது உலகின் 100 ஏழ்மையான நாடுகளுக்கு 500 மில்லியன் பைசர் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை நன்கொடையாக வழங்க உள்ளது.
    • இது ஒரே நாட்டினால் வழங்கப்படும் ஒரு மிகப்பெரிய நன்கொடையாகும்.
  • முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா அவர்கள் “Believe – What Life and Cricket Taught Me” எனும் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
    • இந்தப் புத்தகத்தின் இணை ஆசிரியர் பரத் சுந்தரேசன் என்பவராவார்.
  • ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தொடர் நேர்மறை காற்றழுத்த இயந்திரத்திற்கு (Continous Positive Airway Pressure – CPAP) மாற்றாகஜீவன் வாயுஎனும் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
    • இந்தச் சாதனமானது மின்சாரமின்றியும் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்