TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2021 1164 days 569 0
  • தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மாதாந்திர அளவில் காட்சிப் பதிவு செய்வதற்காக வேண்டி ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதைச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது கட்டாயமாக்கியுள்ளது.
    • இந்தக் காட்சிப் பதிவுகளானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் “Data Lake” (தரவுத் தடாகம்) எனும் தளத்தில் பதிவேற்றப்பட உள்ளன.
  • உலக சுகாதார அமைப்பானதுலாம்டா’ என்ற ஒரு  மாற்றுருவினை புதிதாகக் கண்டறியப் பட்ட வைரஸ் (Variant of Interest)  என வகைப்படுத்தியுள்ளது.
    • இந்த மாற்றுருவானது முதன்முதலில் 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது.
  • 1000 காரட்டுகளுக்கு மேலான எடை கொண்ட மிகப்பெரிய ஒரு வைரமானது தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
    • வரலாற்றில் இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட வைரங்களில் மூன்றாவது மிகப் பெரிய வைரமாக கூறப்படும் இந்த வைரத்தினை டெப்ஸ்வானா எனும் ஒரு நிறுவனம் கண்டறிந்தது.
  • கானா நாட்டு குடிமக்களால் ஒரே நாளில் குறைந்தபட்சம் 5 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • இதுபசுமை கானாஎன்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்